அம்பாறையில் கனமழை: வெள்ள அனர்த்தத்தைத் தடுக்க துரித முயற்சி

0
138

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை காரணமாக நீர்த்தேங்கங்களில் அதிகரித்து வரும் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று
வருகின்றன.
நீர் வெளியேறும் பிரதேசங்களை அகழ்ந்துவிடும் பணியும் நீரோட்டத்தை தடுக்கும் நீர்த்தாவரங்களை அகற்றும் பணியும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரதான நீர் வடிந்தோடும் பகுதியான பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள பெருமளவான
நீர்த்தாவரங்களை அகற்றும் பணி, கனரக வாகனங்களின் உதவியோடு நேற்று முதல் இடம்பெறுகிறது.
குறித்த பகுதியில் சல்;வீனியா போன்ற நீர்த்தாவரம் மூடியுள்ளதால் சின்னமுகத்தவாரத்தின் ஊடாக நீர் வெளியேறுவது தடைப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஏற்பாட்டில் நீர்த்தாவரங்கள்
அகற்றப்பட்டு வருகின்றன.