அம்பாறையில் சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தினால் நல்லிணக்க அனுபவப் பகிர்வு

0
163

அம்பாறை சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேசங்களில் சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தினால் நல்லிணக்க குழுக்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது.
அம்பாறை சிங்கள சகோதர மொழி பேசும் மக்கள் நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச மக்கள் அம்பாறை
பிரதேசத்திற்கும் சென்றிருந்தனர்.
நல்லிணக்கத்திற்காக விஜயம் செய்த மக்கள் வணக்கஸ்தலங்களுக்கு சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
மொழி, உணவு, கலை மற்றும் கலாசார விழுமியங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டதுடன், அனைத்து சமூகங்களும் ஒன்றாக வாழ வேண்டும்
புரிந்துணர்வையும் ஏற்படுத்தி கொண்டனர்.