28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறையில் சீரற்ற காலநிலை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
காலநிலை காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்ததுடன் இடையிடையே சிறிய மழை பெய்து வருகின்றது.

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடாத்தி வரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதேவேளை, மறுஅறிவித்தல் வரை வங்களா விரிகுடா மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாளை தினத்துக்குள் இது சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியநீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர் , ஒலுவில், போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை ,வழமைக்கு மாறாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான காலநிலை மாற்றங்களால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles