அம்பாறையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன

0
247

அம்பாறை உஹன பிரதேசத்தில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதற்கட்ட தடுப்பு மருந்து ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்ட்டது.

அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றள்ளது.

இதன்படி உஹன பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 292 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ.குமாரி தெரிவித்தார்.
தடுப்பூசிகள் வழங்கும் முன்பு தடுப்பபூசிகள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டதுடன் உரியவர்களிடம் சம்மதத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின் பயனாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்ட்டதுடன் தடுப்பூசிஅட்டைகள் வழங்கப்பட்டன.

இன்று தடுப்பூசி ஏற்றப்ட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒருமாத இடைவெளிக்குள் வழங்கப்படும் என ஹன பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி என்.லியனகேதெரிவித்தார்.

இச் செயற்திட்டத்தினை உஹன பிரதேச செயலகத்துடன் ,ணைந்து ஹன பிராந்திய சுகாதாரப்பணிமனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.