அம்பாறையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரம்!

0
161

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல் அரசியல்
கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை வட்டார பகுதியில் கட்சி மற்றும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் அப் பகுதி மக்களுக்கு நேற்றைய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் உள்ளிட்டோர் இந்தச் செயற்பாடுகளில்
பங்கேற்றனர்.