அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பயணத்தடை மீறல்களில் ஈடுபட்டு அநாவசியமான முறையில் வீதிகளில் பயணித்த மக்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் வீதிகளில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டமை, முகக்கவசம் சீராக அணியாமை, சமூக இடைவெளி பேணாமை, உரிய அனுமதி பெறாமல் நடமாடியமை போன்ற செயற்பாடுகளுக்காக தடுத்து வைக்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் படிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் ஏனையோர் பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.