அம்பாறையில், நாவிதன்வெளி, சொறிக்கல்டுனை ஆகிய பகுதிகளில், நெல் அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களைத் தேடி காட்டு யானைகள் கூட்டமாக வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது.
இன்று காலையும், நேற்று மாலை வேளையிலும் 12க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வருகை தந்து, அறுவடை செய்யப்பட்ட வயல்களில், புதிதாக முளைக்கும்
புற்களை உண்பதை அவதானித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
யானைகளைப் பார்வையிட பெருமளவான மக்கள் ஒன்று கூடுவதாகவும், அவர்கள் எழுப்பும் சத்தம் காரணமாக, யானைகள், குடியிருப்புக்களுக்குள் நுழைவது தடுக்கப்படுவதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
Home கிழக்கு செய்திகள் அம்பாறையில் யானைகளின் பிரசன்னம் அதிகரிப்பு: குட்டிகளோடு கூட்டமாக வரும் யானைகள்!