அம்பாறையில் 25 கிலோ எடையுள்ள
கொடுவா மீன் சிக்கியுள்ளது

0
287

அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இன்று 25 கிலோ எடையுள்ள பாரிய கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது

இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் மீன் பிடித்த போது குறித்த மீன் சிக்கியுள்ளதுடன் குறித்த மீன் சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்கான சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.