அம்பாறையில், காரைதீவு,கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறையை பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து தெரிவு
செய்யப்பட்ட 75 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான உபகரணங்களும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்திற்கு அமைய
இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிகர் சிந்திக்க அபேவிக்ரம, காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆகியோர் அதிதிகளாகக்
கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான பொருட்களை வழங்கினர்.