அம்பாறை அக்கரைப்பற்றில் கௌரவிப்பு நிகழ்வு

0
108

அம்பாறை அக்கரைப்பற்றில் கௌரவிப்பும், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாதேவஸ்தானத்தின் முகாமைக்காரர் சபையின் ஏற்பாட்டில்,
நிகழ்வு இடம்பெற்றது.
ஆலயத்தின் தலைவர் மு.குழந்தைவடிவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கலாசார விழுமியங்கள் நிறைந்த நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதுடன், திறமையினை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
ஆலய வளர்ச்சிக்கு தொண்டாற்றி ஓய்வு பெற்றவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஆலய நடன நிகழ்வுகளுக்காக சேவையாற்றும் நடன ஆசிரியர், திருமதி. ஜெகதாரணி கிரிசாந்தனும் கௌரவிக்கப்பட்டார்.
கௌரவிப்பு நிகழ்வில் சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.