அம்பாறை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் பண்ணிசை நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் இறைபணிச் செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.கமலமோகனதாசன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, ஸ்ரீஇராமகிருஸ்ணா தேசிய பாடசாலை அதிபர் க.ஜயந்தன், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தலைவர் பி.தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி நிகழ்வுகளில் 56 மாணவர்கள் பங்கேற்றதுடன், பிரிவு ரீதியாக 7 மாணவர்கள் எனும் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு 21 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெறுகின்றவர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.