அம்பாறை அக்கரைப்பற்றில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

0
177

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற
உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அன்ஷார் நளீமியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில்
காணப்படும் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துறைசார் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று
அமைக்கப்பட்டு அக் குழுவினூடாக நிரந்தரமான தீர்வு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
வெள்ள அனர்த்ங்கள் ஏற்படாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் இனங்காணப்பட்டதுடன், அக்கரைப்பற்றில் அரச
அலுவலகங்களுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுவதாக திணைக்களத்தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க,
அரச அலுவலகங்களினை மீள ஒழுங்கமைக்க குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.
விவசாயக் காணிகளிலிருந்து அதி உச்சப்பயனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், கரும்புக்
காணிகளில் மக்கள் கூடிய இலாபம் பெறுவதற்கான மாற்று விலங்கு வேளாண்மை செய்வது தொடர்பாகவும்
கலந்தாலோசிக்கப்பட்டது.
விவசாய வீதிகளினை புனரமைத்தல்,நீர்ப்பாசன மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுததல், சுத்தமான குடிநீர் வழங்குதல்
போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை விஸ்தரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாநகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.