அம்பாறை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தால்
பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடாத்தப்படவுள்ளது

0
174

அம்பாறை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் முதல் தடவையாக இடம்பெறவுள்ள பிரிமியர் லீக் 2023 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் கழக அறிமுக நிகழ்வும்
கிரிக்கெட் சுற்றுத்தொடர் தொடர்பான கருத்துக்கள் பரிமாற்ற நி;கழ்வும் நேற்றிரவு விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில்
இடம்பெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் விளையாட்டு உத்தியோகத்தர்களான சாரங்கன் மற்றும் ரிசாந்தன் அனுசரணையாளர்களான ததீஸ்வரன் சமூக செயற்பாட்டாளர் பிரதீபன் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்
பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழாவினை சிறப்பிக்கும் முகமாகவும் இளைஞர்களை இந்து இளைஞர் மன்றத்தினுள் உள்வாங்கி
அதன் மூலம் அவர்களை சமூகப்பணிக்குள் அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் கீழும் இச்சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான அனுசரணையை மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,
மிஸ்டர் பிறைம் உரிமையாளர் க.ததீஸ்வரன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் சமூக செயற்பாட்டாளர் பிரதீபன்; உள்ளிட்டோர் வழங்கவுள்ளனர்.
அறிமுக நிகழ்வில் சுற்றுப்போட்டியின் நோக்கம் பற்றி இந்து இளைஞர் மன்ற தலைவராலும் உறுப்பினர்களாலும் தெளிவுபடுத்தப்பட்டன.
போட்டிகளில் கலந்து கொள்கின்ற எட்டு அணிகளின் பெயர்கள் மற்றும் வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள், புள்ளிக் கணிப்பீட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள்,
அனுசரணையாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் போட்டியின் விதிமுறைகள் பற்றி கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இணைப்பாளர் ரஜனிகாந்தினால்
விளக்கமளிக்கப்பட்டது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரினால் கழகங்களின் செயலாளர்களிடம் சுற்றுப்போட்டி தொடர்பான ஒப்பந்தங்களும் கையளிக்கப்பட்டன.
கழங்களின் சார்பில் போட்டித்தொடர் மற்றும் போட்டியினை ஒழுங்கமைத்த இந்து இளைஞர் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதுடன் இளைஞர்களை சமூக பணிக்குள் உள்ளீர்க்கும்
இதுபோன்ற பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
போட்டித்தொடர் எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளதுடன் சீருடை அறிமுக நிகழ்வும் அன்றையதினம் இடம்பெற
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டது.