அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்
நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் தமிழரசு கட்சியின்
தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்
பங்கேற்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்காக போட்டியிடும் 10 வட்டாரங்களைச் சேர்ந்த வேட்பாளர்களும், போனஸ் ஆசனங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களும்
வாக்களர்களுக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டனர்.
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் பங்கெடுத்தனர்.