அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

0
125

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக இன்று இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமான்டர் ஏ.சி.அபயகோன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை சிறப்பித்தார்.

பிரதேச செயலாளரின் பொங்கல் நிகழ்வோடு ஆரம்பமான தைப்பொங்கல் பூஜை வழிபாடுகளை அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கஜமுகசர்மா நடாத்தி வைத்தார்.

தொடர்ந்து சூரியபகவானுக்கான பிரார்த்தனைகளோடு உழவருக்கு உதவிசெய்யும் கோமாதாவிற்கான விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் பிரிகேட் கொமாண்டர் ஏ.சி.அபயகோன் உட்பட பிரதம குரு சிவஸ்ரீ கஜமுகசர்மாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

பிரதேசத்தின் விவசாயிகள் ஐவர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் நிறைவாக காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.