அம்பாறை கடற்கரையோரங்களை துப்புரவு செய்யுமாறு கோரிக்கை

0
202

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், தாவரங்கள் அதிகளவாக உள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். .

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக குறித்த பகுதியில் அதிகளவு கரையொதுங்கும் பிளாஸ்டிக் கழிவுகள், தாவரங்களினால் மீன் பிடிக்க முடியாதுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பொருட்கள் வலையில் சிக்குவதனால் தமது வலைகள் அதிகளவு சேதப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த பகுதியை துப்பரவு செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறான கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருகின்றன.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மினவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.