அம்பாறை கல்முனையில் சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாசார நிகழ்வு

0
226

மனித அபிவிருத்தி தாபனத்தினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பு மற்றும் கனடா பங்காளர் நிறுவன அனுசரணையுடன், தேசிய
மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமான, சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாசார நிகழ்வு அம்பாறை கல்முனையில் இடம்பெற்றது.
மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட உதவி இணைப்பாளர் றியால் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
பல்லின சமூகங்களின் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் முகமாக இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை
பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், மத போதகர்கள்
எனப் பலரும் கலந்து கொண்டனர்.