தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று அம்பாறை கல்முனையில் நடைபெற்றது.
‘பிள்ளைகளின் பாதுகாப்பு சாரதிகளின் கைகளிலே’ எனும் தொனிப் பொருளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சமூக உளநல அதிகாரி யூ.எல்.அசார்டீனால், இந் நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை தமிழ் பிரிவிலுள்ள பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகள் பங்கேற்றனர்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலியின் வழிகாட்டலில், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீலின் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கல்முனை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.