அம்பாறை கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன், கடந்த கால நாட்காட்டிகளிலிருந்து, திகதிகளைக் கூறும்போது,
ஞாபக சக்தியின் ஊடாக, அந்தத் திகதிக்குரிய நாட்களை கூறும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
மாணவனின் சாதனை தொடர்பில், பாடசாலை அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹல் நஜீம், கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய மாணவனின் வியத்தகு ஆற்றல் தொடர்பில் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் முன்னிலையில், மாணவன் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார்.