அம்பாறை கல்முனை கானான் ஐக்கிய சபை தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

0
130

157வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை கானான் ஐக்கிய சபை தேவாலயத்தில்
சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திகவின் வழிகாட்டுதலின் கீழ், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்
தலைமையில் பிரார்த்தனை ஒழுங்கு செய்யப்பட்டது.
இப்பிரார்த்தனை நிகழ்வினை அருட்சகோதரர்களான ரி.ரவிந்திரகுமார் மற்றும் ஸ்ரிபன் வசந்தகுமார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் ,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் ,பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.