அம்பாறை கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையின் காரியாலய கட்டட திறப்பு விழா

0
92

அம்பாறை கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையின் காரியாலய கட்டட திறப்பு விழா இன்று பேரவையின் தலைவர் விநாயகம்பிள்ளை
தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ , பௌத்த மதகுருமார்கள் மற்றும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையின் உறுப்பினர்கள் உட்பட பலரும் நிகழ்வில்
கலந்து கொண்டனர்.
கல்முனை நகரில் தமிழர் கலாசார மண்டபம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை யினர் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கான பூர்வாங்க பணியினை ஆரம்பித்து வைக்கும் வகையில் இவ் புதிய காரியாலய கட்டட திறப்பு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.