அம்பாறை கல்முனை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்

0
81

வழக்கு நடவடிக்கைகளுக்காக, அம்பாறை கல்முனை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடியுள்ளார். இன்று குறித்த சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் சந்தேக நபருக்கு பிணையாளிகள் இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள சிறை கூடத்திற்கு அழைத்து
செல்லப்பட்டார். அவ்வேளை சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரே, சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.