அம்பாறை காரைதீவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

0
244

அம்பாறை கல்முனைப் பிராந்தியத்தின் சுகாதாரசேவைகள் பணிமனையின் கீழுள்ள சுகாதார வைத்திய அதிகாரி
காரியாலயத்தில் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களாகக் கடமையாற்றம் நாற்பதுக்கு மேற்பட்ட உதவியாளர்கள்,
இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறரை வருடமாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் நாளாந்த கொடுப்பனவில் கடமையாற்றிக்
கொண்டிருக்கின்றனர் என்பதுடன், நிரந்தர நியமனம் செய்வதாக அரசாங்கம் அறிவித்தும் இன்று வரை எந்த
விதமான முன்னெடுப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அநியாயம் செய்ய வேண்டாம்’,
‘அகில இலங்கை நுளம்புக்களத்தடுப்பு உதவியாளர்களை சுகாதார அமைச்சினூடாக நிரந்தரம் செய்’ போன்ற வாசகங்களை
ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுத் தொடக்கம் நாடு தளுவிய ரீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெறுவதாக அதன் தலைவர் முஸாமில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.