அம்பாறை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட வீதிகள் அபிவிருத்தி

0
185

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட வீதிகள் புனருத்தானம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் 36 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 850 மீட்டர் காபட் வீதியாகவும்,750மீட்டர் கொங்கிரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று கிரீன்பீல்ட் வீட்டுதிட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் வேண்டுகோள்ளுக்கு அமைய குறித்த