அம்பாறை சாய்ந்தமருதில் 68 உயர்தர மாணவர்களுக்கு, சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட, சமுர்த்தி உதவி பெறும்
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
மாதம் ஒன்றிற்கு 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஸ்ட சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்
சப்றாஸ், பிரதேச செயலாளர் ஆஸிக், சாய்ந்தமருது மகாசங்க முகாமையாளர் றியாத், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை சாய்ந்தமருதில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான நிதி கொடுப்பனவு!