அம்பாறை சாய்ந்தமருதில், வெள்ள அனர்த்தத்தைக் கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

0
205

வெள்ள அனர்த்தம், டெங்கு மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் என்பவற்றை கருத்தில் கொண்டு அம்பாறை சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தப்படுத்தும் பாரிய
வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை மாநகர சபை, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து இவ்வேலைத்திட்டத்தை
முன்னெடுத்து வருகிறது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபையும் தனது கனரக வாகனம் ஒன்றை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்,
எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.