அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி பிரதேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்கால சூழலைக் கருத்திற் கொண்டும் சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டும் அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி பிரதேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கனடாவில் வசிக்கும் மனோகரன் அர்வின் என்பவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வறுமையின் கீழ் மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
காரைதீவு பிரதேச செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவரின் ஒழுங்கமைப்பில் தெரிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.