அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் சர்வதேச வறுமை ஓழிப்பு வாரத்தினை முன்னிட்டு, பிரதேசத்தில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான
ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றது.
நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் அரசரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.
கிராமங்கள் தோறும் வீட்டுக்கு வீடு சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் ஊடாக, நாட்டில் இருந்து முற்றாக வறுமையை இல்லாது ஒழித்து, கிராமங்களில்
மக்களை வலுப்படுத்தும் நோக்கில் சிறு சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வாக இடம்பெற்றது.
செயலமர்வின் வளவாளராக தொன்கிழக்குப் பல்கலைக் கழக முகாமைத்துவப் பீட பேராசிரியர் கலாநிதி எஸ்.குணபாலன் கலந்து கொண்டு செயலமர்வினை நடாத்தினார்.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேயவிக்கிரம, பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு இருந்த அரச அலுவலங்களில், பயனுள்ள பசுமைபுரட்சி திட்டத்தின் ஊடாக
பயிரிடப்பட்டு இருந்த மரக்கறித் தோட்டத்தில் அறுவடை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.