அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு நிகழ்வு இடம்பெற்றது.

0
219

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மதங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு புரிந்துணர்வுகளை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக அக்டட்
நிறுவனத்தினால் சகவாழ்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்சி யுரேமினியின் ஒருங்கிணைப்பில் விநாயகபுரம் வெண்தாமரை அமைப்பின் ஊடாக விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில்
சகவாழ்வு புரிந்துணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையில் மதங்களுக்கு இடையிலான செயற்திறன்மிக்க இணக்கப்பாட்டிற்கான சிவில் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில்
பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் வழிபாட்டல்களின் ஊடாக அக்டட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன்
இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
விநாயகபுரம் சத்திவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கலந்துகொண்டார்.
அக்டட் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள்,
ஆசிரியர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.