அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல், தொழில் சந்தை நிகழ்வு நேற்றைய தினம், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
உதவிப்பிரதேசசெயலாளர் நிருபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வேலைவாய்ப்புக்களை வழங்கக் கூடிய, அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள்
பங்கெடுத்து, தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான சேவைகளை வழங்கின.
தொழில்பயிற்சி நிறுவனங்களால்,கற்கைநெறிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
பிரதேசசெயல நிர்வாக பிரிவின் முகாமையாளர் மற்றும் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர், கிராமசேவர்களுக்கான நிர்வாகஉத்தித்தியோத்தர் ,திருக்கோவில் பிரதேசசெயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோத்தர்கள், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோத்தர்களும் தொழிற்சந்தை நிகழ்வில் பங்குபற்றினர்.