அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆமைவட்ட வயல் பிரதேசத்தில், நேற்று, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுபோக நெற் செய்கையின் அறுவடை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படும் நிலையில், காட்டு யானைகளின் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளன.
வயலில் வேலை செய்வதற்காக சென்றவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நிந்தவூர் – 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த மீராலெப்பை முகமது முஸ்தபா என்ற நபரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.