அம்பாறை நிந்தவூரிலுள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை 19ம் திகதி உடற்கல்வி ஆசிரியர் ஒருவரால், தரம் 9ம் வகுப்பில்
கற்கும் மாணவன் ஒருவர் பாலியல் துஸ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் அதிபரிடம் முறையிட்டதுடன், எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் துஸ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் குறித்த மாணவன் நேற்று மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுச் சென்றனர்.
மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர், தலைமறைவாகி உள்ளதாகவும் மாணவனின்
தாயார் குறிப்பிட்டார்
Home கிழக்கு செய்திகள் அம்பாறை நிந்தவூரில் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.