அம்பாறை பாண்டிருப்பில் மரநடுகை நிகழ்வு

0
143

அம்பாறை பாண்டிருப்பு பிரதேசத்தில், சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருது பெற்ற மாணவனான தேசிகன் செவ்வேள்குமரனின் ஏற்பாட்டில்
மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது,
அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கல்முனை பிரதேச உத்தியோகத்தர் திருமதி எஸ்.புஸ்பராஜினி தலைமையில் நடைபெற்ற
மரநடுகை நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
கலந்து கொண்டார்.
கோட்ட சுற்றாடல் ஆணையாளர் ரி.ஐங்கரன், அகரம் சமூக அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன் உட்பட சுற்றாடல் முன்னோடி கழகத்தின் மாணவர்களும்
கலந்துகொண்டு, பாண்டிருப்பு சிறு குளம் பகுதியில் நிழல் மரங்களை நாட்டினர்.