அம்பாறை பொத்துவிலில் கோமாரி ஹளுகொல கிராமத்தில் விவசாய அமைச்சின் ஊடாக, கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்திக் கீழ் நவின விவசாய மயமாக்கல் திட்டத்தின் மூலம், பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.திஸாநாக்கா தலைமையில் உலர் மிளகாய் செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலர் மிளகாய் உற்பத்தியினை அதிகரித்து ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் 150 ஏக்கரில் 300 விவசாயிகளுக்கு 500மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மிளகாய் செய்கையாளருக்கு 16இலட்சம் ரூபா பெறுமதியான நவின விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டு உலர் மிளகாய் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.ஜ.பிரனாஸ், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதி திட்டப் பணிப்பாளர் ஆர்.ஞானசெல்வன், விவசாய தொழிநுட்ப விசேட நிபுணர் அருள்நந்தி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.