24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட பிரார்த்தனை

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருகுக்கள் தலைமையில் இன்று அதிகாலை மஹா மிருத்யுஞ்ஞ கோம வழிபாடுகள் இடம்பெற்று இருந்தன.

இதன்போது ஆலயத்தின் மகா மண்டபத்தில் விசேட யாகசாலை அமைக்கப்பட்டு சுமார் 40 மேற்பட்ட மிகவும் அற்புத மூலிகைகள் கொண்டு ஹோமம் மேற்கொள்ளப்பட்டு இருந்ததுடன் இறுதியாக அக்கினியில் ஆகுதிகள் இட்டு வேண்டுதல் வழிபாடுகள் இடம்பெற்றன

இதனைத் தொடர்ந்து ஹோமத்தில் எழுந்தருளி செய்யப்பட்ட பூரண கும்பம் ஆலய உள்வீயில் வலம் வந்து விநாயகப் பெருமான் மற்றும் மூலமூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கும் ஆகுதி புனித நீர் அபிசேகம் செய்யப்பட்டு தீபாரதணைகள் இடம்பெற்று விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நிறைவு பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது

இவ் யாக பூஜை வழிபாடுகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் தலைவர் எஸ்.சுரோஸ் மாவட்டம் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தரகளான கே.ஜெயராஜ் திருமதி சர்மிளா பிரசாந் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு மற்றும் விசேட பூஜை வழிபாடுகளும்; சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

ஆலய தலைவர் த.முருகானந்தம்; தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை இந்து சமய தர்மாசிரியர், இளம் வைசப்புலவர், ஈசான சிவாச்சாரியார் ஆலய குரு சிவஸ்ரீ பகீரத சுகிர்த சர்மா நடாத்தி வைத்தார்.

வழிபாடுகளில் நாட்டில் இருந்துகொரோனா நோய் முற்றாக அகல வேண்டும் எனவும் நாட்டுமக்களும் நலமுடன் இருக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.


திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருகுக்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை(09) அதிகாலை மஹா மிருத்யுஞ்ஞ கோம வழிபாடுகள் இடம்பெற்று இருந்தன.

இதன்போது ஆலயத்தின் மகா மண்டபத்தில் விசேட யாகசாலை அமைக்கப்பட்டு சுமார் 40 மேற்பட்ட மிகவும் அற்புத மூலிகைகள் கொண்டு ஹோமம் மேற்கொள்ளப்பட்டு இருந்ததுடன் இறுதியாக அக்கினியில் ஆகுதிகள் இட்டு வேண்டுதல் வழிபாடுகள் இடம்பெற்று இருந்தன

இதனைத் தொடர்ந்து ஹோமத்தில் எழுந்தருளி செய்யப்பட்ட பூரண கும்பம் ஆலய உள்வீயில் வலவம் வந்து விநாயகப் பெருமான் மற்றும் மூலமூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கும் ஆகுதி புனித நீர் அபிசேகம் செய்யப்பட்டு தீபாரதணைகள் இடம்பெற்று விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நிறைவு பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது

இவ் யாக பூஜை வழிபாடுகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் தலைவர் எஸ்.சுரோஸ் மாவட்டம் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தரகளான கே.ஜெயராஜ் திருமதி சர்மிளா பிரசாந் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அட்டாளைச்சேனையிலுள்ள கிழக்கு இலங்கை அறபுக் கல்லூரியில் இடம்பெற்ற விஷேட துஆப் பிராத்தனையும் மத வழிபாடும் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.எம். அஸ்ரப் ஷர்க்கியின் தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளுக்கமைய நடைபெற்ற இந்நிகழ்வில். கல்லூரியின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் நிந்தவுர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பர், உலமாக்கள். மத்ரஸா மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்விஷேட துஆப் பிரார்த்தனை இடம் பெற்றது .

இந்நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவையும் துஆப் பிராத்தனையையும் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.எம். அஸ்ரப் ஷர்க்கி
நிகழ்த்தினார்.


மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பல பள்ளிவாயல்களில் தற்போதைய கொரோனா நிலைமை நீங்கி சுமூகமான நிலைமை ஏற்பட விஷேட பிராத்தனை நிகழ்வுகள் நடைபெற்றன.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம் பெற்ற பிராத்தனை நிகழ்வு அப் பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ரஊப் மஜீத் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிராத்தனையை மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி நடாத்தினார். காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் அப்பள்ளிவாயலின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்;ற பிராத்தனை நிகழ்வில் பள்ளிவாயலின் இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.அப்துல் காதர் பலாஹி பிராத்தனையை நடாத்தினார்.

புதிய காத்தான்குடி அல அக்ஷா ஜும்ஆப்பள்ளிவாசலில் பள்ளிவாசலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற பிராத்தனை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் காத்தான்குடி முன்னாள் காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி பிராத்தனையை நடாத்தினார்.

சமூக இடைவெளியைப் பேணி நடைபெற்ற இந்த பிராத்தனை நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் உட்பட பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி 5ம் குறிச்சி பதுறிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை நீங்கவேண்டுமென வேண்;டி பிராத்தனை நிகழ்வொன்று நடைபெற்றது.

அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப் பிராத்தனை நிகழ்வில் மௌலவி எம்.எம்.ஏ.மஜீத் றப்பானி, கே.ஆர்.எம்.ஸஹ்லான் றப்பாணி, உட்பட உலமாக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சமூக இடைவெளியைப் பேணி சுகாதார நடைமுறைகளையுடன் நடைபெற்ற இந்த பிராத்தனை வைபவத்தில் மௌலவி எம்.எஸ்.ஏ.ஸாஜஹான் றப்பானி பிராத்தனையை நிகழ்த்தினார்.

கொரோனா நிலைமை நீங்கவேண்டுமெனவும் கொரோனாவினால்; பாதிக்கப்பட்ட மக்கள் பூரண சுகமடையவேண்டுமெனவும் பிராத்தனை செய்யப்பட்டதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இதன் போது ஆசி வேண்டி பிராத்தனை நடாத்தப்பட்டது.


மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.

நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் பௌத்த மத விவகார புத்தசசான அமைச்சு மற்றும் ,ந்துக்கலாசார திணைக்களம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் இந்த மகா யாகம் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மோஹானந்த குருக்களினால் ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.

இந்த நாட்டில் இருந்து கொரனா தொற்று நீங்கி நாடு சுபீட்பமான காலத்தினை அடையவேண்டும் என இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.

மட்டக்களப்பு ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யத்து உலமா சபை, பொலிஸ் திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் நகர சபை உள்ளிட்ட பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி இப்பிரார்த்தனை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

புனித யாசீன் சூறா பாராயணம் செய்யப்பட்டதையடுத்து மௌலவி எம்.ஐ.நாஸர் இஹ்ஸானி துஆ பிரார்த்தனை நடாத்தினார்.

இந்த உலகை தற்பொது ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இந்த நாட்டிலிருந்து நீங்கி நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் எழுச்சிபெற்றவர்களாக வாழவேண்டுமென இங்கு பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles