அம்பாறை மருதமுனையில் ஊடக பேரவையின் ஆரம்ப நிகழ்வு

0
150

அம்பாறை மருதமுனையில் ஊடக பேரவையின் ஆரம்ப நிகழ்வும், இப்தார் நிகழ்வும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்
நடைபெற்றது.
பேரவையின் ஸ்தாபகர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.
புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான ஆவணங்களும் நிகழ்வில் கையளிக்கப்பட்டது.
இப்பேரவையானது மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமம் மற்றும் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவுகளை உள்ளடக்கிய அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களைக்
கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது