அம்பாறை மாவட்;டத்தில் வயல் நிலங்கள் வரட்சியடைந்துள்ளதால் கால் நடைகளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலப் போகத்தில் அம்பாறை மாவட்டத்தில் சில நிலங்கள் முற்றாகப்பாதிக்கப்பட்டிருந்த வேளை தற்போது வயல் நிலப்பிரதேசங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகக்காணப்படுவதால் விவசாயிகள் வயல் நிலங்களுக்குச் செல்ல அச்சப்படுகிண்றனர். இது சம்பந்தமாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.