அம்பாறை மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறப்பு

0
393

அரசாங்க அறிவித்தலின் பிரகாரம் மக்களின் முக்கிய சில தேவைப்பாடுகளை பூர்த்திசெய்யும் வகையில் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

நேற்று காலை முதல் தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் மீனவர் ஓய்வூதியம் மருந்து விநியோகம் முதியோர் கொடுப்பனவு மாதாந்த கொடுப்பனவு என்பவற்றிற்கான சேவைகள் இடம்பெறுகின்றன.

எனினும், சுகாதார நடைமுறைகளைப் பேணி மக்கள் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.