அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழைபெய்துவரும் நிலையில், 110 அடி கொள்ளளவுடைய சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 108.50 அடியாக உயர்ந்துள்ளது.
5 வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிகமாக 5.5 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர்
எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதேவேளை, சாகாமம் பிரதான வீதியின் நீத்தை ஆற்றின் அருகில் மதகு மீதாக வெள்ளம் பாய்ந்துவரும் நிலையில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன், வயல் நிலங்களும்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.பபாகரன், சின்னமுகத்துவாரம் உள்ளிட்ட நீர் வடிந்தோடும் பிரதேங்களை பார்வையிட்டதுடன் கிராமங்களின் நிலை தொடர்பிலும் மாவட்ட
செயலகத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளார்.
ஆலையடிவேம்புபிரதேசசமூகநலன் அமைப்பினர் தனவந்தர்கள் மற்றும் கிராமமக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கையும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.