அம்மை நோய்க்கு மருந்தாகும் கிணற்று நீர்! கிராம மக்கள் கூறுவது என்ன…

0
6

இந்து மக்கள் மத்தியில் இன்றளவும் இறைவழிபாடு மற்றும் அறநெறி ரீதியான நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக கட்டி காக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அறிவியலுடன் சில நடைமுறைகள் ஒன்றிருந்தாலும், அதனை இறைவழிபாடு சார்ந்து பார்க்கும் ஒரு சிந்தனை போக்கு இந்துமக்களிடையே வியாபித்து காணப்படுகிறது.

அந்தவகையில், இலங்கையில் இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தின் கண்டி – நாவலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில், காலம் காலமாக வற்றாத கிணறு ஒன்றை பற்றி எமது லங்காசிறி ஊடகமானது ஒரு தகவல் திரட்டை முன்னெடுத்திருந்தது.

நாவலபிட்டிய – மேரிவளை பிரதேசத்தில் உள்ள குறித்த கிணறானது, ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் பயண்படுத்தி வருவதாகவும், காளி தெய்வ வழிபாடுடைய ஆலயத்திற்கு அருகில் இருப்பதால், இதனை காளி கிணறு என பெயரும் சூட்டியுள்ளனர் அந்த கிராம மக்கள்.

குறிப்பாக இந்த கிணறு, அந்த கிராம மக்களால் 3 தலைமுறைக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், இதுவரை எந்த விதமான நோய் நிலைகளும் அதனால் ஏற்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

அது மாத்திரம் அல்லாது, இந்த நீரை அருந்துவதால் அம்மை, மற்றும் தொற்றுநோய்கள் இறையருளால் இல்லாது போவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.