அரசாங்க நிதி பற்றியகுழுவின் தலைவர் பதவியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க விலகுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அவ்வாறான தகவல் எதுவும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைவராக தெரிவு செய்யப்பட்ட போதும், ஆளும் கட்சியின் ஒத்துழைப்பில் மயந்த திஸநாயக்க தலைவராக தெரிவானார்.
இந்தநிலையில், தமது பதவி விலகலை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்துள்ளார்.