எல்லை நிர்ணய அறிக்கையின் முதற்கட்ட வரைபில் சில சிறுபான்மை குழுக்களுக்கு பாதக நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பான வாத பிரதிவாதங்கள் தற்போது அரசியல் மட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் வகையில், எல்லை நிர்ணய அறிக்கையில் திருத்தம் செய்யப்படுமா, அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதே தற்போது முக்கியமாக இருக்கிறது. இதில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. எவ்வாறு இந்த எல்லை நிர்ணய அறிக்கையில் சில சிறுபான்மை குழுக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதக நிலைமையை மாற்றி அமைக்க முடியும் என்பதே இங்கு மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.