முல்லைத்தீவில், வீதி புனரமைக்கப்படாது நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாயம் செய்யும் அக்கரைவெளி, எரிஞ்சகாடு, சுகந்தாமுறிப்பு, கன்னாட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதியில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது.
இதன் காரணமாக அறுவடை செய்த நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும், அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் எனவும் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற கரைதுறைப்பற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த வீதியினை மதிப்பீடு செய்து 100 மீற்றர் தூரம் தற்காலிகமாக புனரமைப்பு செய்து தரும்படி கோரியிருந்தும் புனரமைப்பு செய்து கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.