29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரச நிறுவனங்களில், வரி இலக்கம் திறக்கும் திட்டம் ஒத்திவைப்பு

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, அரச நிறுவனங்களில், வரி இலக்கம் திறக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல், நடைமுறைக் கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும் போதும், புதுப்பிக்கும் போதும், வரி இலக்கம் கட்டாயமாக்கப்படும் என்ற தீர்மானம், ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘ஆண்டுக்கு, 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே, வரி செலுத்த தகுதியுடையவர்கள். இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், வரி இலக்கத்தை பெற வேண்டும். அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை அல்ல. அதனால், ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக் கணக்கு தொடங்குதல், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி கோருதல், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல் மற்றும் நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும், வரி இலக்கம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles