அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு! யாழ் அரச அதிபர்.

0
368

யாழில் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார் .

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று   நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்  சமல் ராஜபக்ச விடம் யாழ் மாவட்ட செயலகம் மற்றும்  பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் சுகாதார அமைச்சு  மற்றும் உள்நாட்டு  அமைச்சுக்கு எம்மால்  அனுப்பப்பட்டிருந்தது 

எனவே உள்நாட்டு அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ள  மாவட்ட செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அனைத்து திணைக்களங்களிலும் கடமை புரிகின்ற அரச உத்தியோகத்தர்களுடைய எண்ணிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கோரி பெற்றிருக்கின்றார்கள் 
அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3200  அரச பணியாளர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என எம்மால்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அத்தோடு உள்ளூராட்சி அமைச்சு உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான விபரங்களை  பெற்றுள்ளார்கள்  
எனவே  இந்த அரச பணிகளில் ஈடுபடும் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அரச அதிபர்

மேலும் 
யாழ்  மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலையின்  காரணமாக 48 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள தோடு சிறுமி ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்  44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 5 சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் வேலணைப் பகுதியில் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன 
குறித்த அனர்த்த  பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு பாதிப்புக்குரிய நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கும்  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது ஏற்கனவே கிடைத்த சேத விபரங்கள் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர்களுக்கு ரிய உதவிகள் வழங்கப்படும்
 

மேலும் தற்பொழுது  கொரோனா   தொற்று  நிலைமை யாழ்மாவட்டத்தில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது இறுதியாக கிடைத்த அறிக்கையின்படி 59 பேருக்கு தொற்று உறுதியாகிருக்கிறது யாழில் இன்று வரை  2 ஆயிரத்து 672 பேர் தொற்றுக்குள்ளாகி யிருக்கிறார்கள் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன
யாழ் மாவட்டத்தில் 2543 குடும்பங்களைச் சேர்ந்த 6413 பேர்  சுய தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள்
கடந்த வாரம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு அந்தோணி புரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அதே நிலையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 47 கிராம அலுவலர் பிரிவில் 60 குடும்பங்களை கொண்ட கிராமத்தினை தனிமை படுத்துவதற்குரிய சிபார்சு வழங்கப்பட்டுள்ளது எனவே இன்று மாலை தொடக்கம் அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும்.

சில கிராமங்களில் தொற்று நிலைமை சற்று தீவிரமாக காணப்படுகின்றது மக்கள் நடமாட்டம் மாநகரப் பகுதிகளில் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலை காணப்படுகின்றது 
எனவே பொதுமக்கள்  இது  மிகவு அபாயமான காலகட்டம் எனவே பயணத் தடை காலத்தில் வீடுகளில் இருந்து தங்களுடைய வழமையான செயற்பாட்டை செயற்படுத்த வேண்டும்.       கிருமித் தொற்றுக்கு மிகவும்  பாதுகாப்பானது  வீடுகளில் இருப்பது தான் எனவே பயணத்தடையினை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பது அவசியமாகும்
தொற்று நிலைமையானது சமூக  தொற்றாக  மாறுவதற்கு நாம் இடமளிக்காது பயணத்தடையினை அனுசரித்து நாம் வீடுகளில் இருத்தல் மிகவும் நல்லதாகும்
அரசின் பயண தடையானது எதிர்வரும் 7ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது அதனை அனுசரித்து பொதுமக்கள் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்துவது மிகவும் அவசியமான தொன்றாகும்

ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் வர்த்தக  செயற்பாடுகள்   ஆரம்பிக்கப்பட்டுள்ளது..அந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலர் கிராம உத்தியோகத்தர்களால்  அறிவுறுத்தல் வழங்கப்படும் எனவே பொதுமக்கள் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வீட்டில் இருந்தவாறு தொலைபேசி ஊடாக தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தால்  உரிய பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் 
 அத்தோடு மாவட்ட செயலகத்தினால் அத்தியாவசிய தேவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கான இலக்கங்களும் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன எனவே அதன் மூலமும் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவை தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள முடியும்
மிக அத்தியாவசிய தேவை நிமித்தம் பிரதேச செயலகம் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபட பவர்களுக்கு மாத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது அதோடு மாவட்டங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடு வோருக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக அனுமதி வழங்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தங்களுடைய பிரதேச செயலரிடம் தொடர்பு கொள்வதன் மூலம் அனுமதியினை  பெற்றுக்கொள்ள முடியும் 

அத்தோடு தனிமைப் படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான அரசின் இடர் கால உதவியான  பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்  அனைவருக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது 
 தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளூர் அனைவருக்கும் அரசின் இடர்  கால நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றது அதாவது அரச உத்தியோகத்தர்கள் ,வருமானம் மட்டம் பார்க்கப்படாது சுகாதார பிரிவினரால் சிபார்சு செய்யப்படும் அனைவருக்கும் அந்த உதவி வழங்கப்படுகிறதுமேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனையில் பாவிக்கப்படும்  இராசாயன திரவத்திற்கு  தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

அந்த நிலையின் காரணமாக மூன்று நாட்கள் அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாதநிலை  நிலை காணப்பட்டதாகவும் எனினும்  தற்போது அந்த நிலமைக்குரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.