தரமற்ற மருந்துகள் அரசாங்க மருத்துவமனைக் கட்டமைப்பால் வழங்கப்படவில்லை என்று சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தரமற்ற மருந்துகள் தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், நீங்கள் கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க மருத்துவமனைக் கட்டமைப்பின் ஊடாக விநியோகிக்கப்படவில்லை. மருந்துத் தரத்தின் தன்மை தொடர்பில் பிரச்னை இருப்பின் அது தொடர்பில் அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்”- என்றார்.