அம்பாறை கல்முனையில், அரிய வகை நீர் நாயொன்று மீட்கப்பட்டு, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தகத்திலேயே, இவ் அரிய வகை நீர் நாய் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இது இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்காசியப்பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது. ஏனைய நீர் நாய்களைவிட இதன் தோற் பகுதியானது, உரோமங்கள் குறைந்ததாகவும், மிருதுவாகவும் காணப்படுகின்றது. இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.