அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 34 வது ஆண்டு நினைவு தினம் இன்று

0
222

இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 34 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில்
அனுஷ்டிக்கப்பட்டது

1987 மற்றும் 1988 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மதகலவரங்களின் போதும் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போதும் இன நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயல்பாட்டிற்காக ஆன்மீக வாழ்வினை அர்பணித்த அருட்தந்தை 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத ஆயுத தாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்

சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளார் 34 வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று விசேட ஜெப வழிபாடுகளுடன் மட்டக்களப்பு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் மெழுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 34 வது ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வில் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன்,அருட்தந்தை .ஜெகதாஸ் , அருட்தந்தை எ.தேவதாசன்,சமூக செயல்பாட்டாளர் குருசமுத்து லவகுமார்,அருட்தந்தையின் உறவினர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர்கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது அருட்தந்தை சந்திரா அடிகளாரின் நினைவுகள் குறித்த கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

மக்களுக்காக தனது வாழ்வையும் உயிரையும் கொடுத்த ஒருவருக்காக இனம் மதம் மொழி கடந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் அருட்தந்தை சந்திரா அடிகளார் என நிகழ்வின் போது அருட்தந்தை. ஜெகதாஸ் கருத்து வெளியிட்டார்.