திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை ஒருங்கிணைத்து அருந்ததி திருமண சேவை நிறுவத்தினால் நடாத்தப்பட்ட மாற்று மோதிரம் கண்காட்சி நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள அஞ்சனா கிராண்ட் பலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
அருந்ததி திருமணசேவைகள் நிறுவன பணிப்பாளர்களான க.கருணாகரன், செல்வி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான புரவலர் காசிம்உமர்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவன்,இராஜாங்க அமைச்சர் சந்திகாந்தனின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஈஸ்வரராஜா, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார், விசேட அதிரடிப்படையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாலக உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்வேறு வடிவங்களில் பல்வேறு வடிவமைப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட கேக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் இதன்போது அலங்கரிக்கப்பட்ட மணமகள்களின் அலங்கார கண்காட்சியும் நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 30க்கும் மேற்பட்ட அழகுகளை நிபுணர்கள் பங்குபற்றியதுடன் திருமண சேவைக்கு தேவையான அனைத்துவிதமான சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
சுயதொழில் முயற்சியாளர்களான பெண்களுக்கு நாங்கள் கைகொடுத்து உதவும் வகையிலும் புதிய வடிவிலான மணப்பெண் அலங்காரங்கள் நவீன முறையில் அறிமுகசெய்யும் வகையிலும் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.