மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியற் கருத்துக்களம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று மாலை நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் முதலாவது ஈகைச் சுடரை இமானுவேல் அடிகளார் ஏற்றியதைத் தொடர்ந்து மதகுருமார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.சஜந்தன், து.ரவிகரன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட், சட்டத்தரணி ந.சிறிகாந், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.